தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி
சினிமா
தமிழக வெற்றிக்கழக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பனையூரில் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தவெகவின் சட்டமன்றக் குழு தலைவர்
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று த.வெ.க. ஆட்சியமைக்க உள்ளது.
இந்தநிலையில், சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் என பலரும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இன்றையதினம் முதலமைச்சர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.























