• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்

இலங்கை

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின்( Well Marked Low Pressure )அமுக்க சாய்வு விசையின்( Pressure Gradient Force – PGF) பற்றாக்குறையின் காரணமாக பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு தற்போது மிக மிகக் குறைவான வேகத்தில் நகருகின்றது.

இதனால் இலங்கையின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறுகின்றன. குறிப்பாக மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம் பகுதிகள் கனமழையைப் பெறுகின்றன.

இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரை வங்காள விரிகுடாவில் நிலவும் என்பதனால் வடக்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணஙகள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் பகுதிகளுக்கு மழை கிடைக்கும் என்பதனால் இப்பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அத்துடன் எதிர்வரும் 18ஆம் திகதி காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் அதுவரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply