• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் 

சினிமா

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதனுடைய வசூலை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரங்களை ரசிகர்களே சமூக வலைத்தளத்தில் பேசுகின்றனர்.

மேலும், தயாரிப்பு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக திரைப்படங்களின் வசூலை அறிவித்துவிடுகிறார்கள்.

குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால், முதல் நாள் வசூல் எவ்வளவு?, முதல் வாரம் வசூல் எவ்வளவு?, 10 நாட்களில் எவ்வளவு வசூல்? என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சூர்யாவின் கருப்பு திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 147 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply