• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் கமலஹாசனின் மகள் இல்லை, என் பெயர் பூஜா! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ரகசியம்!

சினிமா

சினிமாவில் 'உலக நாயகன்' கமல்ஹாசனின் ஆதிக்கம் பற்றி சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட ஒருத்தர் வீட்ல பிறந்தா, பிறக்கும்போதே செலிபிரிட்டி அந்தஸ்து கிடைச்சிடும். ஆனா, உலகமே கமலின் நடிப்பை கொண்டாடிட்டு இருந்தப்போ, அவருடைய சொந்த மகள் ஸ்ருதி ஹாசன் மட்டும், "நான் இவங்க பொண்ணே இல்ல" என்று பொய் சொல்லிட்டு திரிஞ்சிருக்காங்க! என்ன இது, சினிமா திருப்பம் மாதிரி இருக்குனு நினைக்கிறீங்களா? அதன் பின்னணியை பார்க்கலாம். ஸ்ருதி ஹாசன் இன்னைக்கு ஒரு பன்முக திறமையாளர். நடிகை, பாடகி, இசை அமைப்பாளர்னு எல்லாத்துலயும் தனக்கென ஒரு முத்திரை பதிச்சிருக்காங்க. ஆனா சின்ன வயசுல, 'கமல் ஹாசன் மகள்'ங்கிற அந்த அடையாளம் அவங்களுக்கு ஒரு பெரிய சுமையா இருந்துச்சாம். எங்க போனாலும், "ஏய் பாரு, இது கமல் ஹாசன் பொண்ணுல?"னு எல்லாரும் கை காட்டி பேசும்போது, குட்டி ஸ்ருதிக்கு ரொம்பவே சங்கடமா இருக்குமாம். "எனக்கும் ஒரு பேரு இருக்கு, நான் ஸ்ருதி"னு கத்தணும் போல தோணுமாம். இப்படி அப்பாவோட பேர்ல இருந்து தப்பிக்க, ஸ்ருதி ஒரு யோசனை பண்ணியிருக்காங்க. பள்ளிக்கூடத்திலயோ இல்ல வெளியிலயோ யாராவது, "நீ கமல் ஹாசன் பொண்ணா?"னு கேட்டா, "ஐயையோ இல்லவே இல்ல, என் பேரு பூஜா ராமச்சந்திரன், என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்"னு ரொம்ப நம்பிக்கையா பொய் சொல்வாங்களாம்!

இதுல ட்விஸ்ட் என்னன்னா, இந்த ராமச்சந்திரன் வேற யாரும் இல்ல, ஸ்ருதியோட பல் வலிக்கு சிகிச்சை கொடுத்த பல் மருத்துவர்! பாவம், அந்த டாக்டருக்கு, தான் ஸ்ருதி ஹாசனுக்கு அப்பாவா பதவி உயர்வு வாங்குன விஷயமே தெரிஞ்சிருக்காது. தனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க ஸ்ருதி பட்ட இந்த பாடு, இப்போ கேட்க வேடிக்கையா இருந்தாலும், அப்போ அது அவங்களோட சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயமா இருந்துருக்கு. சென்னையோட எல்லா இடத்திலயும் அப்பா கமல் போஸ்டர் தான். அங்க ஸ்ருதியால சுதந்திரமா இருக்கவே முடியல. சாரிகாவும் கமல் ஹாசனும் பிரிஞ்ச சமயத்துல, ஸ்ருதி மும்பைக்கு மாறினாங்க. "அங்கயாவது என்ன யாரும் கமல் பொண்ணுனு சொல்லி அடிக்கடி தொந்தரவு பண்ண மாட்டாங்க"னு நினைச்சுதான் போனாங்க. இப்படி கடினமா உழைச்சுதான், இன்னைக்கு சினிமாவுல தனக்கென ஒரு தனி இடத்தை பிடிச்சிருக்காங்க. அன்னைக்கு அப்பாவோட பேர்ல இருந்து ஓடி ஒளிஞ்ச ஸ்ருதி, இன்னைக்கு ரொம்பவே மாறியிருக்காங்க. "இப்போ கமல் ஹாசன் பெயர் இல்லாத ஒரு ஸ்ருதியை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது"னு சொல்லி, அப்பா மேல இருக்குற மரியாதையை வெளிப்படுத்தியிருக்காங்க. 

 

Nanthini

Leave a Reply