• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு

இலங்கை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகியுள்ளார்.

கபில பெரேரா தமது தீர்மானம் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும், செயலாளர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பேராசிரியர் கபில பெரேரா மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணைவதற்கு தயாராகி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

கபில பெரேரா மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply