• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலய தேர்த்திருவிழா

இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலய தேர்த்திருவிழா இன்று (29) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இலங்கையின் பாடல் பெற்ற ஸ்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலய வருடாந்த மகோற்சவம் மற்றும் தேர்த்திருவிழா மே மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து இடம்பெறும் இந்த விழாக்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி (தேர்த்திருவிழா) விமரிசையாக நடைபெற்றது.  

ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பெருந்திருவிழா மே 21 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது
 

Leave a Reply