• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுக்குமாடி குடியிருப்பை 1.92 கோடிக்கு வாடகைக்கு விட்ட சோனாக்சி சின்கா ... 

சினிமா

ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்சி சின்கா. நடிகர் சத்ருகன் சின்கா மகளான சோனாக்சி சின்கா சல்மான் கான் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்து கொண்ட சோனாக்சி சின்காவுக்கு மும்பை பாந்த்ராவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்பை சோனாக்சி சின்கா குவைத் நாட்டின் துணைத்தூதரகத்திற்கு ஓராண்டுக்கு ரூ. 1.92 கோடி வாடகைக்கு விட்டுள்ளார். குடியிருப்பில் தூதரக தலைமை அதிகாரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் வசிக்க இருக்கின்றனர்.

பாந்த்ரா மேற்கில் உள்ள 81 ஆரேட் என்ற கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள சோனாக்சி அடுக்குமாடி குடியிருப்பு 4350 சதுரடி கொண்டது. ஒப்பந்தம் கடந்த 25-ந்தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.96000மும், ரூ.1000 பதிவு கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் உடற்பயிற்சி கூடம், நூலகம், கூட்ட அரங்கு, ஆண்கள்-பெண்களுக்கு நடைபயிற்சி தடங்கள், விருந்து கூடம், 3 தோட்ட பகுதிகள், யோகா, திறந்தவெளி உடற்பயிற்சி, சிறுவர் விளையாட்டு மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை தூதரகத்தினர் கட்டணமின்றி பயன்படுத்தலாம். 
 

Leave a Reply