அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன் - சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட “ஆராஷ்-இ-கமன்கீர்” என்ற வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் குறித்த ட்ரோன் வீழ்த்தப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேடார் உதவியின்றி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் ட்ரோன் இலக்கைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும், பாரசீக புராண நாயகன் ஆராஷின் பெயரில் இந்த ஏவுகணை பெயரிடப்பட்டுள்ளதுடன், அதனைப் பெருமைப்படுத்தும் வகையில் டெஹ்ரானில் ஆராஷின் உருவம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.























