• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குனர் விஜய்

சினிமா

பிரான்சின் புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' ஓடுதளத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி பங்கேற்றது. லெ மான்ஸ் பந்தய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பங்கேற்ற இந்திய அணி அஜித்துடையது தான்.

62 கார்கள் போட்டியிட்ட இந்த மிகக் கடுமையான பந்தயத்தில், அஜித்தின் அணி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. இதில் கார் எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தையும், கார் எண் 36 ஒட்டுமொத்த வரிசையில் 13-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பெருமைமிகு தருணத்தை முன்னிட்டு அஜித்தின் மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அஜித்திற்கு இயக்குனர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,"வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply