• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எலான் மஸ்க்கால் கோடீஸ்வரராகும் இந்தியர்

இலங்கை

கர்​சரின் தாய் நிறு​வன​மான ‘எனிஸ்​பியரை’ 60 பில்​லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்​கவுள்ள நிலையில், கர்​சர் நிறு​வனத்தை உரு​வாக்​கிய​வர்​களில் ஒருவரான இந்​திய வம்​சாவளி இளைஞன் கோடீஸ்வரராகின்றார்.

கர்சர் என்​பது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) கோடிங் தளமாகும். புரோகி​ராமர்​கள் தங்​களது திட்டங்களுக்கான குறி​யீடு​களை (code) ஏஐ மூலம் எழுத இந்​தத் தளத்​தைப் பயன்படுத்துகிறார்​கள்.

தொழில​திபர் எலான் மஸ்க்​கின் ஸ்பேஸ்​எக்ஸ் நிறு​வனம் இந்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​தில் கர்​சருடன் கூட்டு சேர்ந்​தது. தனது ஏஐ மாடல்​களுக்​குப் பயிற்சி அளிக்க கர்​சரின் கம்ப்​யூட்​டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்​படுத்​தி​யது.

தற்​போது கர்​சரின் தாய் நிறு​வன​மான ‘எனிஸ்​பியரை’ 60 பில்​லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்​கு​கிறார். இதன் மூலம் கர்​சர் நிறு​வனத்தை உரு​வாக்​கிய​வர்​களில் ஒருவரான இந்​திய வம்​சாவளி இளைஞர் அமன் சாங்​கருக்கு 2.7 பில்​லியன் டாலர் கிடைக்​கும். அதே​போல் இதன் பங்​கு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பாகிஸ்​தான் இளைஞர் சுலேஹ் ஆசிப்​புக்​கும் (28) கிடைக்​க​வுள்​ளது.

அமன் சாங்கர் (25) அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பிறந்​தவர். அமனின் தந்தை அரவிந்த் சாங்​கர் மும்பை ஐஐடி.​யின் முன்​னாள் மாணவர். அமனின் தாய் ஷில்பா சாங்​கர் பல் மருத்​து​வர்.

அ மன் மாசாசூசட்ஸ் தொழில்​நுட்ப மையத்​தில் (எம்​ஐடி) சுலேஹ் ஆசிப், ட்ரூயல் மற்​றும் லுன்​னெ​மார்க் ஆகிய தொழில்​நுட்ப வல்லுநர்களைச் சந்​தித்​தார், பின்​னர் அவர்​களு​டன் இணைந்து கர்சர் நிறு​வனத்தை 2022-ல்​ தொடங்​கி​னார்​.
 

Leave a Reply