இங்கிலாந்தின் Andy Burnham குறித்து ட்ரம்ப் அலட்சியமான கருத்து
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமான கருத்துக்களை தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ (NATO) பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது, ட்ரம்ப் , Andy Burnham குறித்து அலட்சியமாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேக்கர்ஃபீல்டின் புதிய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த தனது கருத்தைப் பற்றி புதன்கிழமை செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி,
ஆண்டி பர்ன்ஹாமைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றும், அவர் “தீவிர தாராளவாதக் கொள்கை கொண்டவர்” என்று மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். அத்துடன், பர்ன்ஹாம் வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கமாட்டார் என்று நம்புவதாகவும் ட்ரம்ப் கூறினார்.
தொழிற் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாகப் போட்டியிடப் பரிந்துரைக்கப்படும் ஒரே நபராக பர்ன்ஹாம் உள்ள நிலையில், அவர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் இருவருக்கும் இடையே ஒரு சிக்கலான உறவு உருவாகக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளன.























