• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு

இலங்கை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட தொடருந்து சேவைகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வழக்கமான தொடருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த விசேட தொடருந்து சேவைகள் நாடளாவிய ரீதியில் இயக்கப்படவுள்ளன.

இதற்கமைய,  ஜூன் மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply