2 நாட்களில் Con City திரைப்படம் செய்துள்ள வசூல்..
இலங்கை
கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக என்ட்ரி தந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ். இதன்பின் மாஸ்டர், குட் பேட் அக்லி, அநீதி, Bomb போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் தான் Con City. இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, விடிவி கணேஷ் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்ப்போம். அந்த வகையில், கடந்த 26-ஆம் தேதி வெளியான Con City திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 நாட்களில் Con City திரைப்படம் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.























