• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பணத்திற்காக நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம் - தீவிரமாகும் விசாரணை

இலங்கை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
 

Leave a Reply