நான் ரொம்ப இளமையா இருக்கேனே, அம்மா வேடத்துக்கு சரியா வருமா?
சினிமா
Actress Janaki Sabesh - இவங்கள அம்மாவா உங்களுக்கு தெரியும் ஆனா இவங்க ஒரு underrated வில்லி தெரியுமா
.
விஜய் ஓட அம்மா யாருன்னு கேட்டா ஒரு காலத்துல ஷோபா மேடம நியாபகம் வராது இவங்களதான் நியாபகம் வரும் எனக்கு…காரணம் கில்லி படத்துல விஜய் ஓட innocent அம்மாவா நம்ம மனசுல பதிஞ்ச்சுடாங்க.
.
அயன் படத்துல ஏர்போர்ட் ல இவங்க family member மாத்திரைய miss பண்ணிடாங்க கொஞ்சம் கொடுக்க முடியுமான்னு கேட்டு சூர்யா கிட்ட மாத்திரைய கொடுப்பாங்க சத்தியமா எவனுமே யோசிச்சு இருக்க மாட்டான் இவங்க வில்லன் ஆளுன்னு அந்த அளவு இவங்கள audience அப்பாவின்னு நம்புனாங்க
.
அதுனாலதான் அது யாராலும் பேசி சிலாகிக்காத most underrated decoy character..வேற எந்த புது முகம் நடிச்சு இருந்தாலும் நாம கண்டு புடிச்சு இருப்போம் வில்லன் வேலைதான்னு…அங்க இவங்கள கரெக்ட்டா cast பண்ணி ஜெயிச்சாரு KV Anand
.
இதே அம்மா ஏற்கனவே கில்லி படத்துல உக்காந்து இருக்குறது திரிஷா என்ற real human ன்னு கூட கண்டுபுடிக்க தெரியாத அப்பாவியா நெத்திக்கு பொட்டு வச்சு விட போவாங்க நல்ல வேல விஜய் வாங்கி அந்த பொட்ட வைப்பாறு திரிஷாவுக்கு ?…இவங்களே பொட்டு வச்சு விட்டாலும் நம்பிருப்போம் காரணம் இவங்க முக வெட்டு அப்படி
.
ஆனா சமுகம் பெரிய இடம்…ஆரம்பத்துல இவங்க face dressing sense பாத்து anglo indian ன்னு நெனச்சேன்…ஆனா இல்ல பாலக்காடு ஐயர் குடும்பம். அப்பா கொச்சின் அம்மா திருச்சூர்
.
பிரபல பாடகி Bombay Jayashri இவங்களோட sister-in-law.
.
பிறந்தது பெங்களூரு. படிச்சது கல்கத்தா, டெல்லில Carmel School, DTEA மாதிரி ஸ்கூல்ஸ்ல. Delhi-ல Lady Shri Ram College-ல Political Science, Jamia Millia-ல Mass Communication-ல Masters முட்சுட்டு. அப்படியே ஒரு "convent educated, English-Tamil இரண்டும் தெரிஞ்ச பொண்ணு" முழுக்க முழுக்க academic background
.
அப்பா ஆரம்பத்துல சினிமாவுக்கு வர விடமாட்டேன்னு சொன்னாராம். கல்யாணம் ஆனப்புறம் தான் நடிக்கலாம்னு நிபந்தனை வச்சாராம். 1991-ல படிக்கும்போதே Simi Garewal கூட Rajiv Gandhi டாகுமெண்டரிக்கு assistant director ரா work பண்ணி இருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறம் தான் நடிப்புக்கு entry
.
rajiv Menon-ஓட Minsara Kanavu படத்துல ஒரு nun வேடத்துக்கு போனாங்க - accident-ஆ கிடைச்ச வாய்ப்பு தான் அதுதான் முதல் படம்
.
Shankar-ஓட Jeans படத்துல Aishwarya Rai-க்கு அம்மாவா நடிக்கும்போதே ஜானகி ஷங்கர் கிட்ட கேட்ருக்காங்க, "நான் ரொம்ப இளமையா இருக்கேனே, அம்மா வேடத்துக்கு சரியா வருமா?"னு. Shankar சொன்னாராம் - "இளம் அம்மாவா தான் வேணும்"னு. அதுக்கப்புறம் தான் "நரைமுடி, சுருக்கம் இல்லாம salwar போட்ட அம்மா" concept தமிழ் சினிமாவுக்கு வந்தது அங்க அடிச்ச ஹிட்டு தொடர்ந்து 25 படத்துக்கும் மேல பெரிய hero படங்கள் maximum அம்மா role தான்
.
ஒரே மாதிரி ரோல்தான் வருதுன்னு இப்போ கொஞ்சம் நடிக்கிர கொறச்சுட்டாங்க ..இவங்க சினிமா acting நம்பி இருக்குறவங்க கிடையாது காரணம் அவங்களுக்கு marketing field-ல regular job இருந்துச்சு. QUBE cinema technology company-ல official-ஆவும் work பண்ணாங்க, Kerala, Goa film festivals-ல technical partner வேலையும் பாக்குறாங்க.
.
இப்போ kids storytelling-ல ஆழமா எறங்கிடாங்க - "Golpo - Tales Unlimited"னு சொந்த storytelling initiative நடத்துறாங்க, 2018-ல குழந்தைங்களுக்கான புத்தகமும் எழுதி இருக்காங்க.. 'The Jungle Storytelling Festival' மற்றும் அவரது மகள் த்வனி சபேஷுடன் இணைந்து எழுதிய 'Paati's Rasam' சிறந்த குழந்தைகள் புத்தக விருதை வென்றது .
.
மேலும் கேட்பரீஸ், பெப்சோடென்ட், சக்ரா கோல்ட் டீ போன்ற பல முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
.
பெரிதாக பேசப்படாத நமக்கு எல்லாம் ரொம்ப பிடித்த பாசமான அம்மா நடிகை .





















