• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

சினிமா

நடிகர் விஜய்யின் மகள் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. இப்படத்தின் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே.தமிழ்க்குமரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான அய்யய்யோ அம்மாடி இன்று வெளியாகி உள்ளது.

முதல் பாடலான சிக்மா ஸ்டைல் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

படம் முன்னதாக ஜூலை.31ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் வெளியாக உள்ளது. புது வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply