• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்விலிருந்து கதை எழுதுங்கள் - இதுதான் இளம் கலைஞர்களுக்கு அவர்கள் சொல்லிச்சென்ற பாடம்

சினிமா

மறைந்த பேராளுமைகள்
பாரதிராஜா - கே.பாக்யராஜ்
இருவர்க்கும் 
கலைத்துறையினர்
புகழ்வணக்கம் செலுத்தினார்கள்

அந்த மேடையில்
கே.பாக்யராஜ் எழுதிய
சுயசரிதை நூலை
வெளியிட்டுப் பேசினேன்

தமிழ்க் கலாசாரத்தின்
ஆதிச் சுவடுகள்
அடுத்த நூற்றாண்டில்
அழிந்துபோகக் கூடும்

கிராமக் கலாசாரத்தின்
அடையாளங்களை
அறிந்துகொள்ள வேண்டுமெனில்
பாரதிராஜாவின் படங்களைக்
கீழடிபோல் பாதுகாக்கவேண்டும்

தமிழ்ச் சமூகத்தில்
நிலவிவந்த பாலியல் வறட்சி 
ஆணையும் பெண்ணையும்
அழுத்தி வைத்தது

அந்தக் கலாசார
அடக்குமுறைகளைத் தாண்டி
ஆணின் கனவுகளையும்
பெண்ணின் ஆசைகளையும்
வாய்விட்டுப் பேசவைத்தவர்
என்று எதிர்காலத்தில்
பாக்யராஜ் அறியப்படுவார் 

இருபெரும் கலைஞர்களும்
கலையை வாழ்விலிருந்து
கற்றுக்கொண்டு
திரையில் ஒளிபெயர்த்தவர்கள்

‘வாழ்விலிருந்து
கதை எழுதுங்கள்’

இதுதான்
இளம் கலைஞர்களுக்கு
அவர்கள் சொல்லிச்சென்ற பாடம்

வைரமுத்து
@Vairamuthu

Leave a Reply