• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆபாச படங்களில் முதலீடு செய்ய எப்ஸ்டீனை அணுகிய ஆந்திரோபிக் சிஇஓவின் மனைவி - வெளியான அதிர்ச்சி இமெயில் 

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஆந்திரோபிக் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிஇஓ டேரியோ அமோடியின் மனைவி கேமி கிளார்க் இடையே வணிகத் தொடர்பு இருந்ததாக தி வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெரும் புள்ளிகளுடன் தொடர்பில் இருந்த எப்ஸ்டீன் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி அவர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தவர் ஆவார். இதற்கென மிகப்பெரிய நெட்வொர்க், தனித் தீவு ஆகியவற்றை எப்ஸ்டீன் கொண்டிருந்தார்.

கடந்த 2019 இல் அவர் நியூ யார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தொடர்பில் இருந்தவர்களுடனான இமெயில் மற்றும் புகைப்படங்களை ஆவணப்படுத்தியிருந்தார். அவை எப்ஸ்டீன் பைல்ஸ் என அழைக்கப்படுகின்றன. அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி அவை பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

டேரியோ அமோடியின் மனைவி கேமி கிளார்க் 2010 இல் Eddice என்ற பெண்களுக்கான சொகுசு ஆபாசப் பட - Luxury Porn ஸடார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.

கேமி கிளார்க் மற்றும் அவரது பங்குதாரர் இணைந்து Eddice ஸ்டார்ட் நிதி திரட்டி வந்தனர்.

வால் ஸ்ட்ரீட் செய்தியின்படி, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜான் ப்ரோக்மேன் என்பவரால் கேமி கிளார்க் எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

எப்ஸ்டீன் 2008லேயே பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்றவர் என்று தெரிந்தும் அவரை கிளார்க் அணுகியுள்ளார்.

கிளார்க் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், 'American Girl in Paris' உள்ளிட்ட தலைப்பிட்ட படங்களின் திரைக்கதைகளை அனுப்பி நிதி முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

2012 மார்ச்சில் கிளார்க் மீண்டும் முதலீடு பற்றி கேட்டபோது, "Can't do TV sex" என்று கூறி எப்ஸ்டீன் அந்த முதலீட்டை நிராகரித்தார். எப்ஸ்டீன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கேமி கிளார்க் ஆந்திரோபிக் நிறுவனத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், அவர் சிஇஓவான தனது கணவர் டேரியோ அமோடெய்க்கு முக்கிய ஆலோசகராகவும், முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் நபராகவும் செயல்படுகிறார்.

அமோடெயைத் திருமணம் செய்வதற்கு முன்பு, 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகள் கூகுள் முன்னாள் சிஇஓ எரிக் ஸ்மித்துடன் கிளார்க் உறவில் இருந்தார்.

2016ல் கிளார்க் தான் டேரியோ அமோடெயை எரிக் ஸ்மித்திற்கு அறிமுகப்படுத்தினார்.

2021ல் அமோடெய் மற்றும் அவரது சகோதரி டேனியேலா சேர்ந்து ஆந்திரோபிக் நிறுவனத்தைத் தொடங்கியபோது, எரிக் ஸ்மித் அந்த நிறுவனத்தில் அதிக முதலீட்டை செய்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply