• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரியோவின் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்

சினிமா

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ராம் இன் லீலா. இப்படத்தில் பாலாஜி தியாகராஜன் தயாளன், முனிஷ்காந்த், சேத்தன், தீபா வெங்கட், மாளவிகா அவினாஷ், நயனா எல்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட் பதாகைகளின் கீழ் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர். அங்கித் மேனன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆக.21ம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பெயரை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, திரைப்படத்தின் பெயர் தற்போது ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.
 

Leave a Reply