FIFA தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்
இலங்கை
நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த , ஃபிஃபாவின் (FIFA) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (Kevin Lamour) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஃபிஃபாவின் தலைமைத்துவக் குழுவில் இணைவதற்கு முன்பு இன்ஃபான்டினோவின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராகத் திகழ்ந்த மூத்த நிர்வாகி கெவின் லாமூர் (Kevin Lamour) அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டதை, கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பு திங்களன்று (17) உறுதிப்படுத்தியது.
இதன் மூலம் அவரது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.கெவின் ஆற்றிய இரண்டு ஆண்டுகாலப் பணிக்காக ஃபிஃபா அவருக்கு நன்றி கூறியதுதடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தது.
லாமூர், நவம்பர் 2024-ல் ஃபிஃபாவின் உயர்மட்டத் தலைமைத்துவக் குழுவில் இணைந்தார். உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியப் போட்டிகள் தொடர்பான உரிமைகள் உள்ளிட்ட, ஃபிஃபாவின் மிகவும் அதிக வருவாய் ஈட்டித் தரும் சொத்துகளை உள்ளடக்கிய ஒரு புதிய வணிக அமைப்பை உருவாக்குவதற்கான இன்ஃபான்டினோவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.






















