• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்ற ஜாதிமறுப்புத் திருமணம்

சினிமா

சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-06-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எம்.ஜி.ஆர். பேசியதாவது :

இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள்.

சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! "

( விடுதலை , 09 - 07 - 2011 )
 

Leave a Reply