தேசிய வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சுரேஷ் சலே
இலங்கை
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சுரேஷ் சலே இன்று மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





















