• Welcome to TamilsGuide
செய்திகள் 1

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு

இலங்கை

இன்று (9) காலை களுத்துறை, நாகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மனைவி காயமடைந்த நிலையில்    சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply