• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோபக்காரர்.. கொடை வள்ளல் - எளிமைக்கு எடுத்துக்காட்டு - நானா படேகரின் சுவாரஸ்ய வாழ்வு

சினிமா

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல நடிகர் நானா படேகர் (75) நேற்று அதிகாலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 45 நிமிங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவரது உடல் புனே கொண்டுவரப்பட்ட அவரது பண்ணை வீட்டில் நேற்று நள்ளிரவு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ், இந்தி, மராத்தி என பல மொழிகளில் நடித்து நாடு முழுவதும் அறியப்பட்ட சிறந்த நடிகராக நானா படேகர் உள்ளார். நடிகர் என்பதை தாண்டி அவர் தனது எளிமைக்காக அறியப்படுகிறார்.

50 ஆண்டுகால கால திரைப்பட வாழ்க்கையில், 50 முதல் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளபோதும் எப்போதும் ஆடம்பரமின்றி எளிமையான தோற்றத்துடன் காணப்படும் அவர் பல சமூக சேவைகளில் தனது கடைசி காலம் வரை ஈடுபட்டு வந்தார்.

எனவே அவரது மறைவை தொடர்ந்து அவரை பற்றிய நெகிழ்ச்சியான விஷயங்களை சக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், புகழ்பெற்ற எழுத்தாளரும் நடிகருமான ரன்பீர் புஷ்பா சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் அவரது சேவைப் பண்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட செய்தியைக் கண்ட பிறகு நானா மிகவும் மனம் உருகினார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

"மறுநாள், அவர் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள ஒரு காரை வாங்கவிருந்தார். ஆனால், விவசாயக் குடும்பங்களின் கஷ்டங்களைக் கண்ட பிறகு, அந்த முடிவை அவர் கைவிட்டார்.

உடனடியாக அந்தத் தொகையை தலா ரூ. 15,000 மதிப்புள்ள காசோலைகளாக மாற்றி, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு விநியோகிக்குமாறு அவர்களிடம் கூறினார். அவர் 'நாம் அறக்கட்டளை'யை நிறுவி, பலருக்குத் துணையாக நின்றார்" என்று ரன்பீர் தெரிவித்திருந்தார்.

'நாம் அறக்கட்டளை' மூலம், ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நானா படேகர் உதவியுள்ளார்.

அவரது பெரும்பாலான நாட்களை தனது பண்ணை வீட்டில் அமைதியான முறையில் கழிப்பதையே விரும்பினார்.

நானா படேகரின் கோபம் குறித்த வதந்திகளையும் ரன்பீர் புஷ்பா மறுத்துள்ளார். அவரின் கோபத்துக்கு பின்னால் ஒரு சமூகப் பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.

ஒருமுறை சாலையில் பாட்டிலை வீசிய ஒருவரை நானா தடுத்து நிறுத்திய சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

"காந்திஜி மறைந்துவிட்டார், ஆனால் நீங்கள் இன்னும் பூமியில் இருக்கிறீர்கள், இல்லையா? இந்த நாட்டைச் சுத்தமாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு இல்லையா?

இந்தப் பாட்டிலை உங்கள் காரில் குப்பைத் தொட்டியாகப் போட வேண்டுமா?" என்று கேட்டதாக அவர் அந்த நபரை மென்மையாகக் கண்டித்ததாகக் கூறினார்.
 

Leave a Reply