• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு

இலங்கை

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கோர்கா மாவட்டத்தில் நிலவும் சூழல் குறித்து, அங்குள்ள இலங்கை சமூகத்தினருடன் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த அண்மைய தகவல்களை இலங்கையர்களுக்குத் தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் தூதரகம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்வது குறித்து இலங்கை நாட்டினருக்குத் தூதரகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று (11) அதிகாலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், இதனால் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கினால் ஏராளமான சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக நேபாள ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply