• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கேரியாவில் ரன் மல்லி கைது

இலங்கை

இலங்கையின் மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகஸ்தர்களில் ஒருவராக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட ‘ரன் மல்லி’ (Ran Malli) என்றழைக்கப்படும் சரித் சந்தகேலும், பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்டர்போல் (INTERPOL) விடுத்த ‘சிவப்பு அறிவிப்பு’ (Red Notice) மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தரவுத்தளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பல்கேரியப் பாதுகாப்பு அதிகாரிகள் இச்சந்தேக நபரை கைது செய்தனர்.

இவரது கைது நடவடிக்கையை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உறுதிப்படுத்தினார்.

சந்தேக நபரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, வெளிவிவகார அமைச்சு ஊடாக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கைது மற்றும் அவர் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 

Leave a Reply