• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு

இலங்கை

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, அவரை நாளை (12) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (09) ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாக தவறியதைத் தொடர்ந்தே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

பொஸ்பேட் நிறுவனம் ஒன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் மூன்று சுரங்கத் தொழிலுக்கான உரிமங்களை வழங்கியது தொடர்பான விசாரணைகள் நிமித்தமே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


 

Leave a Reply