தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது
இலங்கை
நாவலப்பிட்டி நகர மேயரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர், வீதி விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன விபத்து ஒன்றை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியதாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாகவே மேயரின் மகனும் மருமகனும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.























