• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரியாணி விலை அதிகம்.. குஸ்கா மட்டும் வாங்கி சாப்பிடுவேன்- விக்னேஷ் சிவன்

சினிமா

உலக உணவு நாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் விழாவை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.

ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த விழாவில் விக்னேஷ் சிவன் பேசியதாவது:-

இன்றைய சூழலில் நம்மில் பலருக்கு பிரியாணி எனும் சுவையான உணவு என்பது விடுமுறை நாட்களில் ஒரு ஆப்ஷனாக மாறிவிட்டது.

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பிரியாணியை தவிர்த்து விட்டு, விலை குறைவு என்பதற்காக குஸ்காவை மட்டும் சாப்பிட்டிருக்கிறேன்.

ஆனால் ஒருவேளை உணவு கிடைக்காதவர்களுக்கு பிரியாணி என்பதும்.. அதை சுவைப்பது என்பதும்.. எளிதில் நடக்காத ஒன்றாகும். அதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுக்கும்போது இந்நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன்.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள்- வீடற்றவர்கள்-சாலையோரத்தில் வசிப்பவர்கள்- முதியோர்கள் -ஆதரவற்றவர்கள்- ஆகியோர் பயன்பெறும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இதன் காரணமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதை பெருமிதமாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply