• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் மிர்ணாவுக்கு வந்த சோதனை

சினிமா

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்கள் குறித்து நடிகை மிர்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:
"ஒருநாள் படப்பிடிப்பின் போது எனக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அன்று 'ஜெயிலர் 2' படத்தின் மிக முக்கியமான காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள். உடல்நிலை சரியாகாததால் படக்குழுவினரிடம் உதவி கேட்டேன். அவர்கள் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டும் எனக்குச் சோர்வு குறையவில்லை.

அதன் பின், என் மேனேஜரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தேன். படப்பிடிப்பிற்கு வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என்றும் கூறினேன். ஆனால், அடுத்தடுத்து 5 மருத்துவமனைகளுக்குச் சென்றும் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த மருத்துவரை உடனடியாக வரவழைத்தோம் என்றார்.

"நிலைமையை உணர்ந்த மருத்துவர் எனக்கு ஒரு வீரியமிக்க ஊசியைப் போட்டார். 'இந்த ஊசி அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்தப் பிரச்சினையும் தராது' என்று கூறினார். ஆனாலும் எனக்கு அசௌகரியமாக இருந்ததால், அவர்கள் கொடுத்த மற்றொரு மாத்திரையையும் உட்கொண்டேன்.

அன்று நான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. வெறும் வயிற்றில் வீரியமிக்க ஊசி மற்றும் மாத்திரைகளை அடுத்தடுத்து உட்கொண்டதால், என் உடல் முழுமையாக மரத்துப்போனது. யாராவது என்னை அடித்தால் கூட வலி தெரியாத அளவிற்கு உணர்வற்ற நிலையில் இருந்தேன். என் முகமும் லேசாக வீங்கியிருந்தது.

"அந்த நிலையிலும், நான் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று அந்தப் பிரம்மாண்ட காட்சியில் நடித்தேன். இரண்டு டேக்குகள் முடிந்த பின்னர், இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக 3-வது டேக் எடுக்கலாம் என்று நான் கூறினேன். ஆனால், இயக்குநர் நெல்சன் காட்சி மிகச்சிறப்பாக வந்துவிட்டதாகக் கூறி 'ஓகே' செய்துவிட்டார்.

எனக்கு அப்போது திருப்தி இல்லை என்றாலும், பின்னர் டப்பிங் பேசும்போது அந்த காட்சியைப் பார்த்தேன். உடல்நலக்குறைவையும் தாண்டி அந்த காட்சி திரையில் மிகவும் நன்றாக வந்திருந்தது" என்று மிர்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply