• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட டெலிவரி பாய் படத்தின் டிரெய்லர்

சினிமா

அழகான அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது, அதன் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை டிரெய்லர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்றச் செயல்கள் சார்ந்த சம்பவங்களும் இணைந்திருப்பது கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

அம்மா – மகன் பாசம், காதல், ஆக்ஷன், காமெடி என ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், நகைச்சுவை மற்றும் காதல் தருணங்களும் இடம்பெறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலையும் டிரெய்லர் ஏற்படுத்துகிறது.

படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், லியோ சிவக்குமாரின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Chaandi talkies சார்பில் லெனின் மாதேஸ்வரன் தயாரிப்பில் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்பையும், பி. ஜெய் முருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைப் பயிற்சியை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொண்டுள்ளார். இயக்குநர் நானி இயக்குநராக அறிமுகமாகும் படமாகவும் ‘டெலிவரி பாய்’ அமைந்துள்ளது.

சிலம்பரசன் TR வெளியிட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர், குடும்ப உணர்வுகள், காதல், ஆக்ஷன், காமெடி என பல அம்சங்களைக் கலந்து வழங்கும் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply