• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிசம்பரில் வெளியாகிறது மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியின் டிரெயின்

சினிமா

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார், யுகி சேது, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மிஷ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியின் முதல் படம் என்பதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

Leave a Reply