யால தேசிய பூங்காவின் 1, 2 ஆவது பகுதிகளில் மீண்டும் திறப்பு
இலங்கை
வறட்சியான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆவது பகுதிகள், எதிர்வரும் 16 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
கடுமையான வறட்சியான வானிலை நிலவியதால், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பூங்காவின் சாலைக் கட்டமைப்பில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இப்பகுதிகள் செப்டம்பர் 14 முதல் மூடப்பட்டிருந்தன.
இதற்கிடையில், பூங்கா மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் முகாம் அமைக்கும் இடங்களுக்கான முன்பதிவு வசதி கிடைக்கும்.






















