• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1976ல் மக்கள் திலகம் MGR நடித்த முத்தான மூன்று படங்கள்..

சினிமா

1976ம் ஆண்டு மக்கள் திலகம் MGR நடிப்பில் மூன்று படங்கள் வெளி வந்தன. அவை:
1) நீதிக்கு தலைவணங்கு
2) உழைக்கும் கரங்கள்
3) ஊருக்கு உழைப்பவன்.
நீதிக்கு தலைவணங்கு படத்தில் மக்கள் திலகம் MGRக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். புரட்சி தலைவர் MGRன் அதிக படங்களை இயக்கிய ப. நீலகண்டன் இயக்கிய படம். இருவரது கூட்டணியில் வெளி வந்த கடைசி படம் இதுவே
உழைக்கும் கரங்கள் படத்திலும் மக்கள் திலகம் MGRக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார்.கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார்.
ஊருக்கு உழைப்பவன் படத்தில் மக்கள் திலகம் MGRக்கு ஜோடியாக வாணிஸ்ரீ மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா நடித்திருந்தனர். படத்தில் தலைவருக்கு இரட்டை வேடம். எம். கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார்.மக்கள்திலகம் MGR நடிப்பில் கடைசியாக வெளி வந்த இரட்டை வேட படம் இது தான்.

எல்லா படங்களிலும் சண்டை காட்சிகள் நன்றாக அமைந்திருந்தன.
மூன்று படங்களிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் மெல்லிசை மன்னர் MSV அவர்களின் இசை. மூன்று படங்களுக்கும் MSV அருமையாக இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தன.
 

 

Leave a Reply