வங்காள விரிகுடா வளிமண்டலக் குழப்பம் - இலங்கையில் கனமழை
இலங்கை
இலங்கைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டலத்தின்
கீழ்மட்டக் குழப்பநிலை காரணமாக, நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலையும் அதிகரித்த மழையும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை வேளையில் சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
காற்று:
காற்றின் திசை மாறிக்கொண்டே இருக்கும்.
காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அமைதியாகவோ அல்லது மிதமான நிலையிலோ காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலமான காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகம்) வீசக்கூடும் என்பதோடு கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.






















