• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்? வெளியான அறிவிப்பு

இலங்கை

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் சீராகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் தாமதமாக வந்தமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply