• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏமனின் துறைமுக நகரமான ஏடன் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதலால் பரபரப்பு

ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் உள்ள விமான நிலையத்தின் மீது இரண்டு ஏவுகணைகள் தாக்குதல் நடந்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறையினர், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்குள் நடக்கும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

ஈரான் தொடர்புடைய மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அண்டை நாடான சவுதி அரேபியா மீதும், சவுதி அரேபியா ஆதரவை பெற்றுள்ள ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு அதிகாரி மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், ஏடன் விமான நிலையத்தின் ஒரு பகுதியில், சவுதி ஆதரவு அரசாங்கத்துடன் இணைந்த ராணுவ பிரிவு ஒன்று நிலை கொண்டிருந்ததாகவும், அந்தப் பகுதியே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர்.

ஊடகங்களிடம் பேசுவதற்கு அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஏடன் நகரில் உள்ள அரண்மனை வளாகம் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய கொடிய தாக்குதலுக்கு அடுத்த நாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2015-ஆம் ஆண்டு முதல், சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்கம் இந்த ஏடன் நகரத்தில் இருந்தே இயங்கி வருகிறது.
 

Leave a Reply