• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

சினிமா

Jailer 2 Movie 2 Days Collection: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கடந்த 15-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது ஜெயிலர் 2.

ரஜினியின் மாஸ் நடிப்பு, நெல்சனின் கிளாஸ் இயக்கம், அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை என படம் வேற லெவலில் உள்ளது என்று ரசிகர்கள் விமர்சனம் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஜெயிலர் 2 படத்தின் வசூல் என்னவென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்நிலையில், 2 நாட்களை கடந்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்தின் வசூல் வேட்டையின் தொடக்கம் மட்டுமே, இனி வரும் நாட்களிலும் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

Leave a Reply