• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே இன்றுநான் கவலைப்படாமல் என்ன செய்ய?- வைரமுத்து உருக்கம்

சினிமா

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சாவாப் பாடல்கள் தந்த

தேவா மறைந்துவிட்டார்

தேனிசைத் தென்றல்

நின்று போயிற்றா?

நெஞ்சு கனக்கிறது

தன் பேச்சு மூச்சு

அனைத்திலும்

இசையாகவே இருந்தவர்

சங்கீதத்தோடு

இங்கிதம் தெரிந்தவர்

பண்ணிசைக்கத் தெரிந்த

பண்பாளர்

அவரோடு நான் பணியாற்றிய

அண்ணாமலை, பாட்ஷா

அருணாசலம், வாலி, குஷி,

நேருக்கு நேர், ஆசை,

பஞ்ச தந்திரம் முதலிய

நூற்றக்கணக்கான படங்களின்

பாட்டு வெற்றிக்கு

தேவாவே காரணம்

தேவாவின் இசையைப்போல்

ரஜினிக்கு வேறு யாரும்

பொருந்தவில்லை என்றுதான்

ரசிகர்கள் பேசுவார்கள்

என்ன சொல்வது?

எனக்கு என் விரல்களில்

ஒன்று போய்விட்டது

அவரை இழந்துவாடும்

குடும்பத்தார்க்கும்

ரசிகர்களுக்கும்

என் ஆழ்ந்த இரங்கல்

கவலைப்படாதே சகோதரா

என்று பாடியவனே!

இன்றுநான் கவலைப்படாமல்

என்ன செய்ய? என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply