• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி 

சினிமா

தென்னிந்திய திரையுலகில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தேவா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவரது உடல் நுங்கம்பாக்கம் தருமபுரம் பத்மநாபா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து தேவா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தும் தேவாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் தேவாவின் மகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply