• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு - மீட்பு பணிகள் தீவிரம்

இலங்கை

இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய மின் அமைப்புச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கூரைமேல் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்புகளின் உரிமையாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் பேனல்களை அணைத்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பரவலான மின் தடைக்குப் பிறகு, மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் தடைக்கான உறுதியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் மின்சார பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய கோளாறே இந்த நாடு தழுவிய மின்தடைக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் மின்சாரம் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பதற்கான உத்தேச நேரமும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, நாடு தழுவிய மின் தடையை தேசிய மின் அமைப்புச் செயலகம் உறுதி செய்வதற்கு முன்பாக, நாட்டின் பல பகுதிகளில் மின் தடைகள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply