இது பொய்ச்செய்தி என வரக்கூடாதா? - தேவா மறைவு குறித்து ராமராஜன் உருக்கம்
சினிமா
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு, நடிகரும் இயக்குநரும், முன்னாள் எம்பி யுமான ராமராஜன் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும், பெருந்துயரமாகவும், இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது.
நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார் அவர்கள்.
அவரின் இசை பிடிப்புனாலும், அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலடங்காத படங்களுக்கு இசையமைத்து, ஒரு நல்ல இசையமைப்பாளராகவும், நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும், இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா அவர்கள்.
புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் "இயல் இசை நாடக மன்ற" தலைவராகவும், கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த, அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா சார் அவர்கள்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.























