• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவுக்கு விலக்கு - ட்ரம்ப் திடீர் முடிவு

அமெரிக்க காங்கிரஸினால் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய தடைகள் சட்டத்திலிருந்து ரஷ்யாவுக்கு விலக்களித்து டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் எரிவாயு விலையைக் குறைப்பதற்காக ரஷ்யாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா நாடி வரும் நிலையில், இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பொருளாதார ரீதியான நிவாரணத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ரஷ்ய அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்தப் புதிய தடைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரிடப்பட்ட சட்டமூலத்தின் ஒரு பகுதியாகவும் இந்தத் தடைகள் அமைந்திருந்தன.

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போருக்கான நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான அதிகாரத்தையும் இந்தச் சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply