• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற நபர் அல்ல - டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற நபர் அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும், ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புதினை விட ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி உண்மையான ஆர்வம் காட்டவில்லை.

அமைதி ஒப்பந்தம் வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினாலும், அதற்கான உடன்பாட்டை எட்ட விரும்பவில்லை. ஒப்பந்தத்தைவிரும்புவதாக ஜெலன்ஸ்கி கூறுகிறார்.

ஆனால் உண்மையில் விரும்பவில்லை. ஜெலன்ஸ்கி மீது எனக்கு பெரிய அபிமானம் இல்லை. அவர்கள் அந்த நாட்டையே அழித்துவிட்டனர்” என்றார்.
 

Leave a Reply