பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் வெளியீடு தேதி அறிவிப்பு
சினிமா
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ், திரிப்தி திம்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்பிரிட் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, மார்ச் 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
பிரபாஸும், திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் இணையும் முதல் திரைப்படம் ஸ்பிரிட் . இதில் விவேக் ஒபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் சீதா ராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஃபௌஸி என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கல்கி 2898 பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 உள்ளிட்ட படப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.






















