திரு நல்லதம்பி தர்மராஜா
பூவுலகில் 14 DEC 1953 / விண்ணுலகில் 03 JAN 2026
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட S.K நல்லதம்பி தர்மராஜா அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற S.K நல்லதம்பி(பிரபல வர்த்தகர்), கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம் திருநாவுக்கரசு(பிரபல வர்த்தகர் - புங்குடுதீவு 3ம் வட்டாரம்), பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா, குபேரன், தர்மிதா, சுசேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலீபன், திருமால், கீதிகா உதாசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சீரோன், விஜேன், துஷான், கீரன், அதிரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஷ்ரேயா அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, அம்பிகாதேவி மற்றும் பிறேமாவதி(கமலா), தவமணிதேவி(கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம், சிவநாதன் மற்றும் குணரட்ணம், நாகேஸ்வரன், சரோஜாதேவி, சந்திரவதனி, சோதிகலா, அருட்செல்வி, ரேணுகா, காலஞ்சென்ற தருணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-01-2026 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
குபேரன் மகன் +94743542783
தர்மிதா மகள் +94778785903
தகவல்: குடும்பத்தினர்























Leave a Reply