• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டவுள்ள தகவல்

இலங்கை

நாடாளுமன்ற ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 5 இலட்சத்து 835 வாக்குகளைப் பெற்ற, புதிய ஜனநாயக முன்னணி 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அதற்கமைய, ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் எஞ்சியிருந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்துக்காக, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply