• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம் - சிறுமி உயிரிழப்பு

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 100 எல் மற்றும் 100.1 எல் இடையே கொட்டாவையில் இருந்து பலத்துவ நோக்கி சென்ற கார் ஒன்று அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதி இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்தது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதன்போது, சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாத்தறை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 10 வயதுடைய சிறுமேயே உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply