சவுண்ட ஏத்து தேவா வராரு.. Happy Birthday Thalaivaa - டி.ஆர் பாடலுக்கு Chikitu Vibe செய்த ரஜினி
சினிமா
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார். இன்று 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். இதை முன்னிட்டு தற்பொழுது படக்குழு புதியஅப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.
அதில் சிகிடு வைப் என்ற பாடலுக்கு ரஜினிகாந்த நடினம் ஆடியுள்ளார். இந்த இசையானது டி.ஆர் ராஜேந்திரன் குரலில் அமைந்து இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.






















