• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் நேற்று  மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக  4.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக  சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply